by Staff Writer 09-10-2021 | 10:47 AM
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 250 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் புதிய விலையில் பால் மா விற்பனை செய்யப்படும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோகிராம் பால் மாவின் புதிய விலை 1,195 ரூபா மற்றும் 400 கிராம் பால் பெக்கட்டின் புதிய விலை 480 ரூபா எனவும் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.