தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு டிஜிட்டல்அட்டை

முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு டிஜிட்டல் அட்டை

by Staff Writer 08-10-2021 | 9:52 AM
Colombo (News 1st) முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கான முன்மொழியப்பட்ட டிஜிட்டல் அட்டையை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. குறித்த அட்டைகளை விநியோகித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைவாக, முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட, வௌிநாடுகளுக்கு செல்லும் எதிர்பார்ப்பிலுள்ளவர்களுக்காக குறித்த டிஜிட்டல் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் குறியீட்டின் அடிப்படையில் தொடர்புடைய டிஜிட்டல் அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எந்தவொரு நபரும் போலியான அட்டையை தயாரிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்காத வகையில் முழுமையான பாதுகாப்புடன் குறித்த அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. QR குறியீடு ஊடாக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்