by Staff Writer 08-10-2021 | 9:36 PM
Colombo (News 1st) கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கியினால் 106 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயத்தாள்கள் புதிதாக அச்சிடப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இதுவரையில் மொத்தமாக 1.4 ட்ரில்லியன் திறைசேரி முறிகள் வௌியிடப்பட்டுள்ளன.
நாட்டினால் பயன்படுத்தக் கூடிய, மத்திய வங்கியிடமுள்ள அந்நிய செலாவணியின் பெறுமதி 2.1 அமெரிக்க டொலர் வரை குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர், பேராசிரியர் W.A. விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சூழ்நிலையில், அடுத்த சில மாதங்களில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் எதிர்பார்த்த பணப்புழக்கம் நிறைவேறாவிட்டால், டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் குறைவடையுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.