இரு ஊடகவியலாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

இரு ஊடகவியலாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

by Staff Writer 08-10-2021 | 9:42 PM
Colombo (News 1st) ஊடக சுதந்திரம் என்பது சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் ஊடகவியலாளர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த Maria Ressa மற்றும் ரஷ்யாவை சேர்ந்த Dmitry Muratov ஆகிய இருவரும் அமைதிக்கான நோபல் பரிசுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயகத்தை காப்பதற்காக வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தியமைக்காக இவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகின்றது. ஜனநாயகமும் ஊடக சுதந்திரமும் பாதகமான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் உலகில், தமது இலட்சியங்களுக்காக உறுதியாக நிற்கும் அனைத்து ஊடகவியலாளர்களையும் இருவரும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவுக்குழு கூறியுள்ளது. இருவருக்கும் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசு வழங்கப்படுகின்றது. 329 பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு அதிலிருந்து 58 வயதான Maria Ressa மற்றும் 59 வயதான Dmitry Muratov ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.