பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்

பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்

பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

08 Oct, 2021 | 12:03 pm

பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் மாரடைப்பு காரணமாக தனது 65 ஆவது வயதில் இன்று (08) காலமானார்.

1985 ஆம் ஆண்டு மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் வௌியாகிய சிறை திரைப்படத்தில் ‘ராசாத்தி ரோசாப்பூ…’ என்ற பாடலை எழுதி பாடலாசிரியராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.

‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்…’ மற்றும் ‘நடந்தால் இரண்டடி…’ உள்ளிட்ட இவரது பாடல்கள் மிகவும் பிரபலமானவை.

தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது, தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருதுகளை தனதாக்கிக் கொண்டவர்.

பாடலாசிரியர் பிறைசூடனின் மறைவிற்கு திரையுலகத்தினர் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்