தென் சீன கடலில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் விபத்து: 15 பேர் காயம் 

தென் சீன கடலில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் விபத்து: 15 பேர் காயம் 

தென் சீன கடலில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் விபத்து: 15 பேர் காயம் 

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2021 | 11:28 am

Colombo (News 1st) அமெரிக்காவின் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல், தெற்கு சீன கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 15 படையினர் காயமடைந்துள்ளனர்.

USS Connecticut என்ற கப்பல் நீருக்கடியில் இருந்த அடையாளந்தெரியாத பொருளொன்றின் மீது மோதியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்வானின் பாதுகாப்பு மண்டலத்தில் சீனப்போர் விமானங்கள் நுழைந்ததாக ஏற்கனவே பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

USS Connecticut நீர்மூழ்கி கப்பல் தற்போது அமெரிக்கப் பிராந்தியமான குவாம் பிரதேசத்தை  நோக்கிப் பயணிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் சீன கடல் பகுதி சர்வதேச ரீதியில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றாக உள்ளதென சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

குறித்த பெரும்பாலான பகுதி தமக்கு உரித்தானது என சீனா உரிமை கோருகின்று.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்