வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு

வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு

by Staff Writer 07-10-2021 | 9:44 AM
Colombo (News 1st) நாட்டின் பல்வேறு பகுதிகளில் 24 மணித்தியாலங்களுள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர். மதவாச்சி - ரம்பேவ வீதியின் வெலிஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 73 வயதான முதியவர் உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனமல்வில பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று வீதியிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதில் 26 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார். கம்பளை - உடோவிட்ட பகுதியில் முச்சக்கரவண்டியொன்று மதிலில் மோதியதில் 51 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அக்போபுர பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து சம்பவித்ததில் 67 வயதான ஒருவர் பலியாகியுள்ளார். ஹபரண பகுதியில் லொறியொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் 33 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.