நாட்டில் மண்சரிவு அபாயம் மிக்க 20,000 பிரதேசங்கள் 

நாட்டில் மண்சரிவு அபாயம் மிக்க 20,000 பிரதேசங்கள் 

by Staff Writer 07-10-2021 | 10:27 AM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் மண்சரிவு அபாயம் மிக்க சுமார் 20000 இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் (NBRO) தெரிவத்துள்ளது. குறித்த பகுதிகளிலுள்ள சுமார் 15000 குடும்பங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப்பிரிவின் பணிப்பாளர், கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.