ஓமானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

ஓமானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

by Staff Writer 07-10-2021 | 10:30 PM
Colombo (News 1st) ஓமானுக்கு எதிரான முதல் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஓமானில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ் ஆகியோர் ஓட்டமின்றி ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்ளை இழந்து சிரமத்திற்குள்ளானது. அதனை தொடர்ந்து இணைந்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக ஜோடி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி வீழ்த்தப்படாத ஐந்தாம் விக்கெட்காக 111 ஓட்டங்களைப் பகிர்ந்தது. அவிஷ்க பெர்னாண்டோ 59 பந்துகளில் 89 ஓட்டங்களையும் அணித்தலைவர் தசுன் ஷானக 24 பந்துகளில் 51 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர். இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களைப் பெற்றது. வெற்றி இலக்கான 163 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய ஓமான் அணி, 10 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்கெட்களையும் இழந்தது. மொஹமட் நசீம் 32 ஓட்டங்களையும் அயான் கான் 23 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர். ஓமான் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது. பந்துவீச்சில் லஹிரு குமார 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை கைப்பற்றினார்.