by Bella Dalima 06-10-2021 | 6:36 PM
Colombo (News 1st) மூலக்கூறுகளை கட்டமைத்து ஒன்றையொன்று பிரதிபலிக்கும் கண்ணாடிப் படங்களை (Mirror-image molecules) உருவாக்கிய விஞ்ஞானிகள் இருவருக்கு 2021 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனில் பிறந்த Benjamin List மற்றும் பிரித்தானியரான David MacMillan ஆகியோரே வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் இரசாயன கருவித்தொகுப்பு புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கும் சூரிய மின்கலங்களில் ஒளியைப் பிடிக்கக்கூடிய மூலக்கூறுகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
பரிசுத்தொகையான 10 மில்லியன் க்ரோனாவை (£842,611) வெற்றியாளர்கள் இருவரும் பகிர்ந்துகொள்ளவுள்ளனர்.