தொழிலுக்காக வௌிநாடு செல்வோருக்கு தடுப்பூசி

தொழிலுக்காக வௌிநாடு செல்வோருக்கு தடுப்பூசியேற்றல் நாளை (07) ஆரம்பம்

by Staff Writer 06-10-2021 | 11:06 AM
Colombo (News 1st) வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு தடுப்பூசியேற்றல் நாளை (07) ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கோரிக்கைக்கு அமைய, நாரஹென்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அவர் கூறினார். தடுப்பூசி ஏற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள திகதி மற்றும் நேரத்தில் மாத்திரம் வைத்தியசாலைக்கு வருகை தருமாறு இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, 12 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறார்களுக்கான தடுப்பூசியேற்றல் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, இரண்டாவது தடுப்பூசியை ஏற்றுவதற்கான நடவடிக்கை நாட்டின் பல பகுதிகளில் இன்றும் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார். இதனிடையே, பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் தங்கட்கிழமை தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். இதனிடையே, பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (11) தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசியேற்றல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.