சிறு வர்த்தகங்களின் அபிவிருத்திக்கு ADB உதவி

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களின் அபிவிருத்திக்கு உதவி: ADB அறிவிப்பு

by Staff Writer 06-10-2021 | 11:26 AM
Colombo (News 1st) சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களின் அபிவிருத்திக்கு உதவுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அறிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை நேற்று சந்தித்தபோது ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் நாயகம் கெனிஷி யோகோயாமா (Kenichi Yokoyama) இதனை தெரிவித்துள்ளார். உள்நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் கடந்த ஆண்டில் 750 மில்லியன் டொலர் சலுகைக் கடன் வழங்கப்பட்டிருந்தது. அந்தத் தொகையை அடுத்த ஆண்டில் ஒரு பில்லியன் டொலராக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக கெனிஷி யோகோயாமா இதன்போது தெரிவித்துள்ளார். சேதனப் பசளை உற்பத்தி மற்றும் நைட்ரஜன் பிரிப்பிற்கு (nitrogen extraction) தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு கெனிஷி யோகோயாமாவிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். பொருளாதார ரீதியாக சாத்தியமான பயிர்செய்கை (Economically viable cultivations) மூலம் வனப்பகுதியை அதிகரிப்பதற்குள்ள தேவை குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.