மின் விநியோகம் தடைப்பட்டமைக்கான காரணத்தை வௌியிட்டது மின் சக்தி அமைச்சு

மின் விநியோகம் தடைப்பட்டமைக்கான காரணத்தை வௌியிட்டது மின் சக்தி அமைச்சு

மின் விநியோகம் தடைப்பட்டமைக்கான காரணத்தை வௌியிட்டது மின் சக்தி அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2021 | 11:43 am

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் நேற்று (05) திடீரென மின் விநியோகம் தடைப்பட்டமைக்கு மின் விநியோகக் கட்டமைப்பில் மின்னல் தாக்கம் ஏற்பட்டமையே காரணம் என மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா குறிப்பிட்டார்.

மின் விநியோகம் தடைப்பட்டமைக்கு எவ்வித மோசடி செயற்பாடுகளும் காரணமில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்று முற்பகல் 11.45 அளவில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.

எனினும், நண்பகல் 12.15 அளவில் மின்சார விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்