மட்டக்களப்பில் ஆகக்குறைந்த அளவிலானோரே தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளனர்: ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு

மட்டக்களப்பில் ஆகக்குறைந்த அளவிலானோரே தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளனர்: ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு

மட்டக்களப்பில் ஆகக்குறைந்த அளவிலானோரே தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளனர்: ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2021 | 11:59 am

Colombo (News 1st) தற்போது நாடு திறக்கப்பட்டுள்ளமையால் ஏற்படக்கூடிய தொற்று நிலை குறித்து எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னரே கண்டறியப்படும் என விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கொரோனா ஒழிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 55 வீதமானோருக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மாவட்ட ரீதியில் அதிகளவானோர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்ற போதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தளவிலேயே தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 28 வீதமானோரே தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளதாகவும், அதிகப்படியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 82 வீதமானோர் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை நீக்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

நிலைமையை கருத்திற்கொண்டு அது தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்