English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
06 Oct, 2021 | 8:26 pm
Colombo (News 1st) பண்டோரா பேப்பர்ஸில் தமது பெயர் வௌியாகியமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் கணவரான வர்த்தகர் திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்
இந்த விசாரணைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவரை நியமிக்குமாறு திருக்குமார் நடேசன் கடிதம் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விசாரணையில் தாமும் தமது மனைவியும் நிரபராதிகள் என்பதை நிரூபிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்படுகின்ற அனைவரும் குற்றவாளிகள் என அநேகமானவர்கள் நம்பினாலும் உண்மை அதுவல்ல எனவும் திருக்குமார் நடேசனின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பான தகவல்களை பகிரங்கப்படுத்தல் அல்லது சுயாதீன விசாரணைக்கு அந்த ஆவணங்களை வழங்குதலே நிருபமா ராஜபக்ஸ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோர் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு இலகுவான தீர்வு என சிரேஷ்ட ஊடகவியலாளர் நாமினி விஜேதாச தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள், நிருபமா ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியுடன் தொடர்புடையவை என்பதே அதற்கான காரணமாகும்.
One simple solution for #ThirukumarNadesan and #NirupamaRajapksa would be to produce to the “independent investigation” or to the public (if particularly eager to prove innocence) the asset declaration she must’ve filed to the Elections Commission and to Parliament (1)
— Namini Wijedasa (@nimilamalee) October 6, 2021
during the period in question as the #PandoraPapers covers not only the time she was a Member of Parliament but a Deputy Minister. These declarations mandate the assets of the spouses, children, etc, because a common form of corruption is to hold your monies/properties in the (2)
— Namini Wijedasa (@nimilamalee) October 6, 2021
20 May, 2022 | 06:35 PM
05 May, 2022 | 10:29 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS