ஓய்விற்கு பிறகும் கிரிக்கெட்டுடன் தொடர்பில் இருக்க விரும்பும் தோனி

ஓய்விற்கு பிறகும் கிரிக்கெட்டுடன் தொடர்பில் இருக்க விரும்பும் தோனி

ஓய்விற்கு பிறகும் கிரிக்கெட்டுடன் தொடர்பில் இருக்க விரும்பும் தோனி

எழுத்தாளர் Bella Dalima

06 Oct, 2021 | 2:48 pm

Colombo (News 1st) ஓய்வுக்கு பிறகு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு நடிப்பு என்பது எளிதானது அல்ல என்றும் ஓய்வுக்கு பிறகும் கிரிக்கெட்டுடனான தொடர்பில் இருப்பேன் என்றும் மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார்.

40 வயதான தோனி கடந்த ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் திகதி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதி அவரது கடைசி சர்வதேச போட்டியாகும்.

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் IPL போட்டியில் விளையாடி வந்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தற்போது நடைபெற்று வரும் IPL போட்டியோடு தோனி ஓய்வு பெற்று விடுவார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

இந்த IPL-இல் அவரது தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி Playoff சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

இந்த நிலையில், தோனி இந்த ஆண்டு IPL போட்டியோடு ஓய்வு பெறவில்லை. அடுத்த ஆண்டு IPL போட்டியிலும் விளையாடுகிறார். சென்னையில் விளையாடுவதுதான் தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்