உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான Ever Ace கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான Ever Ace கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2021 | 10:58 am

Colombo (News 1st) உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான Ever Ace முதற்தடவையாக இன்று (06) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச முனையத்திற்கு குறித்த கப்பல் வருகை தந்துள்ளதாக துறைமுகங்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.

24 ஊழியர்களுடன் குறித்த கப்பல் இன்று நள்ளிரவு வரை நங்கூரமிடப்பட்டிருக்கும் என அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

Evergreen நிறுவனத்திற்கு சொந்தமான 400 மீட்டர் நீளமான குறித்த கப்பலில் 24,000 பாரிய கொள்கலன்கள் உள்ளன.

61.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த கப்பல், 22.6 கடல் மைல் வேகத்தில் நகரக்கூடியது.

குறித்த கப்பல் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி ஆசிய – ஐரோப்பிய சமுத்திரம் வரை பயணத்தை ஆரம்பித்ததுடன், கிங்டாவோ, ஷங்காய், நிங்போ, தாய்பே, யன்டியன், ரொட்டர்டேம், ஹேம்பர்க் மற்றும் பெலிக்ஸ்டோவ் துறைமுகங்களுக்கு பயணித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்