சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நான்கு மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

by Bella Dalima 05-10-2021 | 3:47 PM
Colombo (News 1st) காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையுடனான வானிலை தொடரக்கூடும் என்பதால், குறித்த பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர தெரிவித்தார். காலி மாவட்டத்தின் நாகொட, நெலுவ மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள மற்றும் பாலிந்தநுகர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, இம்புல்பே, குருவிட்ட, இரத்தினபுரி, எலபாத்த, நிவித்திகல, கலவான, அயகம மற்றும் கிரியெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.