ஜப்பான் – இலங்கை இணைந்த கடற்படை பயிற்சி வெற்றிகரமாக நிறைவு

ஜப்பான் – இலங்கை இணைந்த கடற்படை பயிற்சி வெற்றிகரமாக நிறைவு

எழுத்தாளர் Bella Dalima

05 Oct, 2021 | 3:26 pm

Colombo (News 1st) ஜப்பான் – இலங்கை இணைந்த கடற்படை பயிற்சி (JA –LAN EX) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

ஜப்பான் தற்பாதுகாப்பு சமுத்திர படையணிக்கு சொந்தமான KAGA மற்றும் இலங்கை கடற்படைக்கு சொந்தமான SLNS Sagara கப்பல் ஆகியன இந்த பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.

இடர்கால நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது ஜப்பான் தற்பாதுகாப்பு சமுத்திர படையணிக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.

ஜப்பான் – இலங்கை இணைந்த கடற்படை பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த KAGA மற்றும்
MURASAME கப்பல்கள் நேற்று (04) நாட்டில் இருந்து புறப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்