3000 ஆரம்ப பாடசாலைகளை ஒக்டோபர் 21 ஆம் திகதி திறக்க தீர்மானம்

3000 ஆரம்ப பாடசாலைகளை ஒக்டோபர் 21 ஆம் திகதி திறக்க தீர்மானம்

3000 ஆரம்ப பாடசாலைகளை ஒக்டோபர் 21 ஆம் திகதி திறக்க தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

05 Oct, 2021 | 11:10 am

Colombo (News 1st) 3000 ஆரம்ப பாடசாலைகளை ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாகாண ஆளுநர்களுடன் தொடர்சியாக இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புகளைக் கொண்ட 200 மாணவர்களுக்கும் குறைந்தளவிலானோர் கல்வி கற்கும் தூர பிரதேச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு முன்னுரிமை வழங்கி, பாடசாலைகளை மீள திறப்பதற்கான  செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்