PANDORA PAPERS: உலக பிரமுகர்களின் இரகசிய பண கொடுக்கல் வாங்கல்கள் அம்பலம்

by Bella Dalima 04-10-2021 | 12:44 PM
Colombo (News 1st) உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வரர்களின் இரகசிய பண கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இரகசிய சொத்துக்கள் தொடர்பிலான தகவல்கள் பாரிய நிதி ஆவணத்தினூடாக (PANDORA PAPERS) அம்பலமாகியுள்ளன. இந்நாள் மற்றும் முன்னாள் உலக தலைவர்கள் 35 பேர், 300-க்கும் அதிகமான சிவில் அதிகாரிகளின் வௌிநாடுகளிலுள்ள சொத்துக்களின் விபரங்கள் உள்ளடங்கிய நிதி ஆவணங்கள் பண்டோரா பேப்பர்ஸ் எனப்படும் ஆவணக் கசிவில் அம்பலமாகியுள்ளது. ஜோர்தான் மன்னர் 70 மில்லியன் யூரோ பெறுமதியான பணம் மற்றும் அமெரிக்க சொத்துக்களை இரகசியமாக திரட்டியுள்ளதாக வௌிக்கொணரப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் Tony Blair மற்றும் அவரது பாரியார் 3,12,000 யூரோ சொத்துக்களை ஆட்சிக்காலத்தில் திரட்டியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மொனாக்கோவில் திரட்டியுள்ள சொத்துக்களின் விபரங்களும் பண்டோரா பேப்பர்ஸ் மூலம் தெரியவந்துள்ளது. செக் குடியரசின் பிரதமர் Andrej Babis, பிரான்ஸில் கொள்வனவு செய்துள்ள 12 மில்லியன் யூரோ பெறுமதிமிக்க வில்லாக்கள் தொடர்பிலான முதலீட்டு தகவல்களை உறுதிப்படுத்த தவறியுள்ளார். FinCen கோப்புக்கள், Paradise Papers, Panama Papers மற்றும் LuxLeaks இன் தொடர்ச்சியாக, கடந்த ஏழு வருடங்களில் உலக தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வரர்கள் மேற்கொண்ட இரகசிய நிதி நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல்களை பண்டோரா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டில் முதற்தடவையாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பிலான பட்டியல் Panama Papers என்ற பெயரில் வௌியானது. கணக்குகளை பகிரங்கப்படுத்த முடியாத பணத்தை இரகசியமாக உலகின் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கும் பிரமுகர்கள் தொடர்பில் ஆராயும் குழுவொன்றே இந்த பட்டியலை வௌியிட்டுள்ளது. இதில் 35 முன்னாள் மற்றும் தற்போதைய அரச தலைவர்கள் உள்ளிட்ட 300-க்கும் ​மேற்பட்ட பெயர்கள் அடங்கியுள்ளன. புலனாய்வு ஊகவியலாளர்களால் உறுதிப்படுத்தப்பட்ட இரகசிய கொடுக்கல் வாங்கல் ஆவணக்கோவைகளின் எண்ணிக்கை 11 மில்லியனுக்கும் அதிகமாகும். 90 நாடுகளை சேர்ந்த பிரமுகர்களின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்கள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. சீஷெல்ஸ், ஹாங்காங், பிரித்தானியா, வர்ஜின் தீவுகள், சைப்ரஸ், பனாமா, துபாய், மொனாக்கோ, சுவிட்சர்லாந்து மற்றும் கேமன் தீவுகளில் உள்ள வங்கிகளில் இந்த வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவின் ஆறு அரசியல்வாதிகளின் இரகசிய கணக்குகள் தொடர்பிலும் பண்டோரா பேப்பர்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த தகவல்கள் சட்டபூர்வமாக வௌியிடப்பட்ட தகவல்கள் என சச்சின் டெண்டுல்கரின் சட்டத்தரணி கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் தொடர்புகளை பேணும் 7 அரசியல்வாதிகளின் கொடுக்கல் வாங்கல்களையும் பண்டோரா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பாகிஸ்தான் பிரதமர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன. 2016 ஆம் ஆண்டில் முதற்தடவையாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பிலான பட்டியல் Panama Papers என்ற பெயரில் வௌியானது. கணக்குகளை பகிரங்கப்படுத்த முடியாத பணத்தை இரகசியமாக உலகின் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கும் பிரமுகர்கள் தொடர்பில் ஆராயும் குழுவொன்றே இந்த பட்டியலை வௌியிட்டுள்ளது. இதில் 35 முன்னாள் மற்றும் தற்போதைய அரச தலைவர்கள் உள்ளிட்ட 300-க்கும் ​மேற்பட்ட பெயர்கள் அடங்கியுள்ளன. புலனாய்வு ஊகவியலாளர்களால் உறுதிப்படுத்தப்பட்ட இரகசிய கொடுக்கல் வாங்கல் ஆவணக்கோவைகளின் எண்ணிக்கை 11 மில்லியனுக்கும் அதிகமாகும். 90 நாடுகளை சேர்ந்த பிரமுகர்களின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்கள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. சீஷெல்ஸ், ஹாங்காங், பிரித்தானியா, வர்ஜீனியா, சைப்ரஸ், பனாமா, துபாய், மொனாக்கோ, சுவிட்சர்லாந்து மற்றும் கேமன் தீவுகளில் உள்ள வங்கிகளில் இந்த வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவின் ஆறு அரசியல்வாதிகளின் இரகசிய கணக்குகள் தொடர்பிலும் பண்டோரா பேப்பர்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த தகவல்கள் சட்டபூர்வமாக வௌியிடப்பட்ட தகவல்கள் என சச்சின் டெண்டுல்கரின் சட்டத்தரணி கூறியுள்ளார்.