சுன்னாகத்தில் பொலிஸார் துப்பாக்கிச்சூடு; இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது

சுன்னாகத்தில் பொலிஸார் துப்பாக்கிச்சூடு; இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது

சுன்னாகத்தில் பொலிஸார் துப்பாக்கிச்சூடு; இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

04 Oct, 2021 | 11:13 am

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சுன்னாகம் பகுதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தவர்களை கலைப்பதற்கு நேற்றிரவு வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் ​மேற்கொள்ளப்பட்டது.

தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த கோப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நிறுத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

போக்குவரத்து குற்றம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்ட போது, பிரதேச சபை உறுப்பினரின் சகோதரர் பொலிஸாருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும் இதன்போது குறித்த இடத்தில் பலர் குழுமியதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்