இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு 50,000 ரூபா இழப்பீடு

இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு 50,000 ரூபா இழப்பீடு

இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு 50,000 ரூபா இழப்பீடு

எழுத்தாளர் Bella Dalima

04 Oct, 2021 | 9:26 pm

Colombo (News 1st) இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அல்லது உறவினர்களுக்கு 50,000 ரூபா இழப்பீட்டுத் தொகை வழங்கும் மத்திய அரசின் முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இழப்பீட்டுத் திட்டம், மாநில அரசாங்கங்களினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு மேலதிகமாக அமைய வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, 30 நாட்களுக்குள் அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்