அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

எழுத்தாளர் Bella Dalima

04 Oct, 2021 | 11:04 am

Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (04) காலை நாடு திரும்பினார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐ.நா பொதுச்சபை கூட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கடந்த மாதம் 18 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தலைமையில் கடந்த 21 ஆம் திகதி கூட்டத்தொடர் ஆரம்பமானதுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கடந்த 22 ஆம் திகதி உரையாற்றினார்.

கூட்டத்தொடரின் பின்னர் ஜனாதிபதி, அரச தலைவர்கள் பலரையும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.

வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ், ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க, வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே உள்ளிட்டோர் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் பங்கேற்றிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்