அழிவடைந்த NMRA தரவுகளை மீளப்பெற நடவடிக்கை

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அழிவடைந்த தரவுகளை மீளப்பெறும் நடவடிக்கை ஆரம்பம்

by Staff Writer 03-10-2021 | 12:56 PM
Colombo (News 1st) அழிக்கப்பட்ட தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) தரவுகளை மீளப்பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் விசேட குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஔடதங்கள் உற்பத்தி ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி சமன் ரத்நாயக்க தெரிவித்தார். தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் நிறைவு பெறும் வரை, சம்பவத்திற்கு பொறுப்பான நிறுவனத்தை பொறுப்பில் இருந்து நீக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனிடையே, Epic Lanka Technologies நிறுவனத்தின் உதவி மென்பொருள் பொறியியலாளர் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்