வீதியில் செல்பவர்களை வழிமறித்து தாக்குதல்; வவுனியாவில் துணிகரம் 

வீதியில் செல்பவர்களை வழிமறித்து தாக்குதல்; வவுனியாவில் துணிகரம் 

எழுத்தாளர் Bella Dalima

03 Oct, 2021 | 2:17 pm

Colombo (News 1st) வவுனியா – கோவில்குளம் பகுதியில் நேற்றிரவு அடையாளந்தெரியாத சிலர் வீதியில் செல்பவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியதாக சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் அருகில் உள்ள வீடுகள் சிலவற்றினுள் நுழைந்து, அங்கிருந்தவர்களையும் தாக்கியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்