கருக்கலைப்பு உரிமை கோரி அமெரிக்க மக்கள் பேரணி

கருக்கலைப்பு உரிமை கோரி அமெரிக்க மக்கள் பேரணி

கருக்கலைப்பு உரிமை கோரி அமெரிக்க மக்கள் பேரணி

எழுத்தாளர் Bella Dalima

03 Oct, 2021 | 12:41 pm

Colombo (News 1st) கருக்கலைப்பு உரிமைகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் பாரிய பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த பேரணிகளில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளதுடன், கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

கருக்கலைப்பை தடை செய்த டெக்சாஸ் மாநிலத்தின் புதிய சட்டத்திற்கு இந்த பேரணியின் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த பேரணிகள் காரணமாக கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படக்கூடுமென, அச்சட்டத்திற்கு ஆதரவானவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா முழுவதிலும் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கிய 1973 ஆண்டில் இடம்பெற்ற வழக்கின் தீர்ப்பை மாற்றியமைப்பதற்கான விசாரணைகளை அந்நாட்டு உச்சநீதிமன்றம் எதிர்வரும் மாதங்களில் ஆரம்பிக்கவுள்ளது.

இந்த நிலையில் தலைநகர் Washington DC-இல் பேரணியாக சென்றவர்கள் உச்சநீதிமன்றத்தை நோக்கிச் சென்றதுடன், கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குமாறு கோரி கையெழுத்தும் சேகரித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்