ஆட்பதிவு திணைக்கள சேவைகள் மீள ஆரம்பம்; ஒரு நாள் சேவை இடம்பெறாது

ஆட்பதிவு திணைக்கள சேவைகள் மீள ஆரம்பம்; ஒரு நாள் சேவை இடம்பெறாது

ஆட்பதிவு திணைக்கள சேவைகள் மீள ஆரம்பம்; ஒரு நாள் சேவை இடம்பெறாது

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2021 | 12:25 pm

Colombo (News 1st) ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களிலும் நாளை (04) முதல் பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கமைவாக இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும் ஒரு நாள் சேவை முன்னெடுக்கப்படாதென ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய, அரசாங்கத்தினால் தற்போது விடுக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை பின்பற்றி சேவைகள் முன்னெடுக்கப்பவுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.

கையடக்க தொலைபேசி மூலம் 225-க்கு அழைத்து நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும்.

அதேபோல, 1225 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அழைப்பை மேற்கொண்டு முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

இதேவேளை, நாளை முதல் கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய அனுமதி வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

COVID தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 07 ஆம் திகதி தொடக்கம் கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இயலுமானவரை E-visit முறையினூடாக கைதிகளை பார்வையிடுமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்