ஐஸ் போதைப்பொருளுடன் மன்னாரில் இருவர் கைது

79 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மன்னாரில் இருவர் கைது

by Bella Dalima 02-10-2021 | 12:45 PM
Colombo (News 1st) சந்தேகநபர்கள் இருவர் 10 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய ஐஸ் போதைப்பொருளுடன் மன்னார் - முருங்கனில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் 79 மில்லியன் ரூபா பெறுமதியுடையதென மதிப்பிடப்பட்டுள்ளது. சமிக்ஞையை மீறி பயணித்த குளிரூட்டி வாகனத்தை துரத்திச்சென்று பரிசோதித்த போது, ஐஸ் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். வவுனியாவை சேர்ந்த 30 மற்றும் 42 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள், குளிரூட்டி வாகனத்துடன் முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்தது. சந்தேகநபர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.