அம்பாறையில் அதிசய கோழிக்குஞ்சு

by Bella Dalima 02-10-2021 | 10:44 PM
Colombo (News 1st) இயற்கையின் விசித்திரமான படைப்புகள் தொடர்பில் அவ்வப்போது தகவல்கள் வௌியாகின்றன. அம்பாறை கல்முனைக்குடியில் நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு ஒன்று பிறந்துள்ளது. கல்முனைக்குடி - கடற்கரைப்பள்ளி வீதியிலுள்ள வீடொன்றிலேயே இந்த விசித்திரமான கோழிக்குஞ்சு உள்ளது. COVID பெருந்தொற்று காலத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக அடைகாக்க வைத்த முட்டையொன்றில் இருந்தே இந்த கோழிக்குஞ்சு பிறந்ததாக உரிமையாளர் தெரிவித்தார். பிறந்து மூன்றே நாட்களான இந்த விசித்திரமான கோழிக்குஞ்சு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.