விசாவிற்காக திருமணம் செய்துகொண்ட ராதிகா ஆப்தே

விசாவிற்காக திருமணம் செய்துகொண்ட ராதிகா ஆப்தே

விசாவிற்காக திருமணம் செய்துகொண்ட ராதிகா ஆப்தே

எழுத்தாளர் Bella Dalima

02 Oct, 2021 | 4:23 pm

Colombo (News 1st) தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள ராதிகா ஆப்தே, தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமான ராதிகா ஆப்தே 8 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த பெனட்டிக் டைலர் என்ற இசைக்கலைஞரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆனாலும் தனக்கு திருமண முறைகள் மீது நம்பிக்கையே இல்லை எனவும் விசா வாங்குவதற்காக மட்டும் தான் திருமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து இளைஞரை மணந்தாலும் இப்போது நான் இந்தியாவில் தான் இருக்கின்றேன். அவ்வப்போது இங்கிலாந்திற்கு சென்று எனது கணவரை சந்தித்துவிட்டு வருகிறேன். சினிமாவில் நடிப்பதற்காக எனது கணவரை பிரிந்து நான் தனியாக இருக்கிறேன் என்று தகவல்கள் பரவுகின்றன. அதில் உண்மை இல்லை. வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தால் விரைவாகவும், எளிதாகவும் விசா கிடைக்கும் என்றனர். அதற்காகத் தான் அவரை மணந்தேன். அதன்பிறகு எனது வேலையை நான் செய்து கொண்டு இருக்கிறேன். அவசியம் ஏற்படும்போது கணவரை சந்திக்க செல்கிறேன்

என ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்