மன்னாரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரிழப்பு

மன்னாரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Oct, 2021 | 5:02 pm

Colombo (News 1st) மன்னாரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் – எருக்கலம்பிட்டி, புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் முச்சக்கரவண்டியை சோதனைக்குட்படுத்திய போது, போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் நேற்றிரவு கைது செய்தனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் இன்று காலை திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இதன்போது, அந்நபர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

எருக்கலம்பிட்டி – தர்கா நகர் பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்