சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து

எழுத்தாளர் Bella Dalima

02 Oct, 2021 | 6:21 pm

Colombo (News 1st) நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் அக்கினேனி நாக சைதன்யா ஆகிய இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக தமது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

சமந்தா- நாக சைதன்யா விவாவகரத்து செய்திகள் வெளிவரத் தொடங்கிய போது, இது குறித்து இருவருமே எதுவும் சொல்லவில்லை.
வதந்தி என மட்டுமே இதற்கான பதிலாக சமூக வலைத்தளங்களிலும் சமீபத்திய சில நேர்காணல்களிலும் தெரிவித்து இருந்தார்கள்.

இந்த நிலையில், இன்னும் சில நாள்களில் (அக்டோபர் 6) இருவருக்கும் நான்காவது திருமண நாள் வரவிருக்கும் நிலையில், தற்போது இருவருமே தத்தமது சமூக வலைத்தளங்களில் பல உரையாடல்கள் மற்று யோசனைகளுக்கு பிறகு கணவன், மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து இருவருடைய தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளதாக பதிவிட்டுள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by S (@samantharuthprabhuoffl)


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்