மட்டக்களப்பில் கணவரால் மனைவி கொலை

மட்டக்களப்பில் கணவரால் மனைவி கொலை

எழுத்தாளர் Bella Dalima

02 Oct, 2021 | 11:52 am

Colombo (News 1st) மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி, மகிழூர் பகுதியில் கணவரால் மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்.

வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் 38 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் வௌிநாட்டில் தொழில் புரிந்து நாடு திரும்பியவர் என தெரியவந்துள்ளது.

வௌிநாட்டிலிருந்த காலப்பகுதியில் அனுப்பிய பணம் தொடர்பில் கணவர் வினவியதை அடுத்து ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் வலுப்பெற்றுள்ளது.

இதனையடுத்து, மனைவி தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்