புதிய விமான எதிர்ப்பு ஏவுகணையை பரீட்சித்த வட கொரியா

புதிய விமான எதிர்ப்பு ஏவுகணையை பரீட்சித்த வட கொரியா

புதிய விமான எதிர்ப்பு ஏவுகணையை பரீட்சித்த வட கொரியா

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2021 | 11:06 am

Colombo (News 1st) வட கொரியா ஒரு புதிய விமான எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

விமான எதிர்ப்பு ஏவுகணை “குறிப்பிடத்தக்க போர் செயல்திறன்” மற்றும் ஏனைய புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளதாக வட கொரிய அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த ஒரு மாதத்தில் வட கொரியா முன்னெடுத்துள்ள நான்காவது ஏவுகணை பரிசோதனை இதுவாகும்.

“ஹைபர் சொனிக் (Hypersonic) மற்றும் பெலஸ்டிக் வகையைச் சேர்ந்த இரண்டு ஏவுகணைகளே இவ்வாறு பரீட்சீக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்