ஜப்பானின் இரு போர் கப்பல்கள் நாளை (02) நாட்டை வந்தடையவுள்ளன 

ஜப்பானின் இரு போர் கப்பல்கள் நாளை (02) நாட்டை வந்தடையவுள்ளன 

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2021 | 10:01 pm

Colombo (News 1st) ஜப்பான் கடற்படையின் பாரிய கப்பல்களான Murasame மற்றும் Kaga ஆகிய இரண்டு கப்பல்களும் நாளைய தினம் (02) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன.

பசுபிக் வலயத்தின் ஏனைய நாடுகளுடன் இரு தரப்பு பயிற்சியில் ஈடுபட்டதை அடுத்து இந்தக் கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளன.

முரசாமே மற்றும் காகா ஆகிய இரு போர் கப்பல்களும் இலங்கைக்கு வருகை தருவது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்