ஒக்சிஜன் விநியோகம் வழமைக்கு திரும்பியது 

ஒக்சிஜன் விநியோகம் வழமைக்கு திரும்பியது 

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2021 | 1:52 pm

Colombo (News 1st) கொடுப்பனவுகள் தாமதமான காரணத்தால், அனுராபுரம் வைத்தியசாலை உள்ளிட்ட சில இடங்களில் ஒக்சிஜன் விநியோகத்திற்கு இடையூறு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது ஒக்சிஜன் விநியோகம் சீராக முன்னெடுக்கப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த 29 ஆம் திகதி அனுராதபுரம் வைத்தியசாலை மற்றும் மெத்சிறி செவன கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு ஒக்சிஜன் விநியோகிக்கும் சிலோன் ஒக்சிஜன் நிறுவனம் ஒக்சிஜன் விநியோகத்தை நிறுத்தியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்