திறக்கப்படவுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பமாகவுள்ளன 

by Staff Writer 30-09-2021 | 3:31 PM
Colombo (News 1st) நாரஹேன்பிட்ட மற்றும் வேரஹெர அலுவலகங்கள் நாளை (01) முதல் மீள திறக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. 011 2 677 877 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தமக்கான திகதி மற்றும் நேரம் ஆகியவற்றை ஒதுக்கிக்கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.