இலங்கை விஜயத்திற்கு தயாராகும் இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர்

by Staff Writer 30-09-2021 | 10:24 PM
Colombo (News 1st) இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவின் (Harsh Vardhan Shringla) இலங்கை விஜயம் தொடர்பில் இன்று (30) செய்தி வௌியாகியுள்ளது. அதனடிப்படையில், அடுத்த மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 05 ஆம் திகதி வரை அவர் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக செய்தி வௌியிடப்பட்டுள்ளது. அண்மையில் நியூயோர்க் நகரில் இலங்கை - இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்நிலையிலேயே, பிரதமர் மஹிந்த மஹிந்த ராஜபக்ஸ கடந்த 28 ஆம் திகதி இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோப்பால் பாக்லேயை சந்தித்திருந்தார்.