உயிர் காப்பாளர்களுக்கு அமெரிக்கா உதவி

இலங்கையின் உயிர் காப்பாளர்களுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவி

by Chandrasekaram Chandravadani 30-09-2021 | 7:42 PM
Colombo (News 1st) இலங்கையின் உயிர் காப்பாளர்களிடையே முதல் பதிலளிப்பவர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த அமெரிக்க தூதரகம் உதவுகின்றது. திடீர் நீர் தொடர்பான விபத்துகள் மற்றும் பேரிடர் சூழ்நிலைகளில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சரியான அறிவு, தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைகளுடன் ஆயுள் சேமிப்பாளர்கள் இருப்பது மிகவும் அவசியம். இலங்கை உயிர்காப்பு சங்கம் (SLLS) என்பது இலங்கையின் தேசிய உயிர்காக்கும் மற்றும் நீர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கான தேசிய அமைப்பாகும். இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) மற்றும் அமெரிக்க தூதரகத்தின் ஏனைய அதிகாரிகள், SLLS செயற்பாடுகளை தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து தமது கடமைகளை நிறைவேற்ற தேவையான ஆதரவை வழங்கி வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு முதல் CMSE இடமிருந்து மருத்துவம், முதலுதவி பயிற்சி, சமூக ஊடகங்கள் மற்றும் விளம்பரப் பயிற்சி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் மருத்துவ முதலுதவி பொருட்களின் நன்கொடை அடங்கலாக SLLS குழு எண்ணற்ற உதவிகளை பெற்றுள்ளது. கருவிகளை முறையாக பராமரிப்பதை உறுதி செய்வதற்காக CMSE அதிகாரிகளால் நடத்தப்பட்ட விசேட பயிற்சி அமர்வுகள், CMSE இயக்குநர் டோனி சூ (Tony Xu), உதவி இயக்குநர் ஸ்கொட் அண்டர்சன் (Scott Anderson) மற்றும் மருத்துவ ஆலோசகர் நாதன் கிரீன் (Nathan Greene) ஆகியோரால் மேற்பார்வை செய்யப்பட்டுள்ளது.