ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்தமைக்கு பொலிஸார் கவலை தெரிவிப்பு

ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்தமைக்கு பொலிஸார் கவலை தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2021 | 1:48 pm

Colombo (News 1st) அமைச்சர் பந்துல குணவர்தனவினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய வாக்குமூலம் பெறுவதற்காக சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் சிலர் அழைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வழமையான செயற்பாடு அல்லவென பொலிஸ் தலைமையகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளுக்காக ஒத்துழைப்பு கோரப்பட்ட சந்தர்ப்பங்களில், அந்த ஊடக நிறுவனங்கள் தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்ததாகவும் ஊடகவியலாளர்கள் பொதுவாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படுவதில்லை எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, அசௌகரியத்திற்குள்ளான ஊடகவியலாளர்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் கவலை வௌியிட்டுள்ளது.

அத்துடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தொழில்முறைக்கு களங்கம் ஏற்படும் வகையில் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ள அதிகாரிகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்