ஈக்குவடோர் சிறைச்சாலை மோதலில் 116 கைதிகள் உயிரிழப்பு

ஈக்குவடோர் சிறைச்சாலை மோதலில் 116 கைதிகள் உயிரிழப்பு

ஈக்குவடோர் சிறைச்சாலை மோதலில் 116 கைதிகள் உயிரிழப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

30 Sep, 2021 | 11:30 am

Colombo (News 1st) தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரின் Guayaquil நகரிலுள்ள சிறைச்சாலைக்குள் நேற்று முன்தினம் (28) இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 116 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈக்குவடோர் வரலாற்றில் இடம்பெற்ற பாரிய சிறைச்சாலை அசம்பாவிதமாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலில் குறைந்தது ஐவரின் தலை துண்டிக்கப்பட்டு அதேநேரம், ஏனையவர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மோதல் நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுமார் 400 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்