by Staff Writer 29-09-2021 | 4:59 PM
Colombo (News 1st) ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் (NMRA) தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட "எபிக் லங்கா" நிறுவனத்தின் உதவி மென்பொருள் பொறியியலாளர் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான உதவி மென்பொருள் பொறியியலாளரால் கடந்த ஜூலை 09 ஆம் திகதி வீட்டிலிருந்து 05 மணித்தியாலங்கள் செலவிட்டு NMRA தரவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல், நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
இது டிஜிட்டல் பயங்கரவாத செயற்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.