துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2021 | 10:27 am

Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்களன்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்றிரவு (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

குறித்த பொருட்களை விடுவிப்பதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விடுவிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ அண்மையில் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்