சீனாவிலிருந்து கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்த சேதனப் பசளையின் இரண்டாவது மாதிரி பரிசோதனையிலும் பக்டீரியா உறுதி

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2021 | 10:25 pm

Colombo (News 1st) சீனாவிலிருந்து நாட்டிற்கு கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டிருந்த சேதனப் பசளை தொகையில் பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா காணப்படுவதாக இரண்டாவது தடவை மேற்கொள்ளப்பட்ட மாதிரிப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக விவசாய பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த டி சில்வா நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

அந்த பரிசோதனையில் குறித்த சேதனை பசளையில் பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

எனவே, குறித்த சேதனப் பசளை தொகையை நாட்டிற்கு கொண்டுவருவதை தவிர்க்குமாறு தாம் சிபார்சு செய்தவாக அவர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்