ஏற்றுமதி விவசாயத்தினூடாக 63 பில்லியன் ரூபா வருமானம்

ஏற்றுமதி விவசாயத்தினூடாக 63 பில்லியன் ரூபா வருமானம்

ஏற்றுமதி விவசாயத்தினூடாக 63 பில்லியன் ரூபா வருமானம்

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2021 | 9:42 am

Colombo (News 1st) இந்த வருடத்தின் முதல் 08 மாதங்களில் விவசாய செய்கை ஏற்றுமதி ஊடாக 63 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 17 பில்லியன் ரூபா அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளதென ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர், பேராசிரியர் A.P. ஹீன்கெந்த தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் 40,000 இற்கும் அதிக மெட்ரிக் தொன் கறுவாப்பட்டை, மிளகு, கராம்பு, சாதிக்காய், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கறுவாப்பட்டை ஏற்றுமதியூடாக 26.9 பில்லியன் ரூபாவும் மிளகு ஏற்றுமதியூடாக 13 பில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளதாக பேராசிரியர் A.P. ஹீன்கெந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்