12 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி

12 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2021 | 11:37 am

Colombo (News 1st) மேல் மாகாணத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் அதற்கும் மேற்பட்ட தரத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (27) முதல், நாள்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

சீமாட்டி ரிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையில், 12 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்ட மற்றும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாக வைத்தியர் ஜீ. விஜேசூரிய குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டிலுள்ள ஏனைய வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக வைத்தியர் ஜீ. விஜேசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்