விமான நிலையத்தின் புதிய PCR ஆய்வுகூடம் ஆரம்பிக்கப்படவில்லை – விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

விமான நிலையத்தின் புதிய PCR ஆய்வுகூடம் ஆரம்பிக்கப்படவில்லை – விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2021 | 4:31 pm

Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய PCR பரிசோதனை கூடம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

விமான பயணிகளுக்காக தற்போதும் பழைய முறையிலேயே பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கான கொள்ளளவு தொடர்பில் ஆராய வேண்டும் என்பதுடன் அதனை தொடர்ச்சியாக செயற்படுத்த வேண்டுமாயின் பல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்