தெற்காசிய கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவராக எச்.எம். சிசிர குமார தெரிவு

தெற்காசிய கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவராக எச்.எம். சிசிர குமார தெரிவு

தெற்காசிய கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவராக எச்.எம். சிசிர குமார தெரிவு

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2021 | 9:57 pm

Colombo (News 1st) ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவர் ஷிஹான்.எச்.எம். சிசிர குமார, தெற்காசிய கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை தேசிய கராத்தே அணியின் காட்டா மற்றும் குமித்தே முன்னாள் பயிற்றுவிப்பாளராகவும் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் தொழில்நுட்ப பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

H.M. சிசிர குமார, ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவராக 2015 ஆம் ஆண்டு தெரிவானார்.

இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் நடப்பு தலைவராகவும் ஷிஹான்.எச்.எம். சிசிர குமார செயற்பட்டு வருகின்றார்.

தெற்காசிய கராத்தே தோ சம்மேளனத்தின் நிர்வாகக்குழுவை தெரிவுசெய்யும் தேர்தல் இம்முறை உலக கராத்தே சம்மேளனத்தின் தலைவர் முன்னிலையில் இடம்பெற்றிருந்ததாக தேசிய தெரிவுக் குழுவின் உறுப்பினர் சென்செய் அன்ரோ தினேஷ் தெரிவித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்