தியவன்னா எண்ணெய் படலம் குறித்த விசாரணை அறிக்கை சுற்றாடல் அமைச்சரிடம் கையளிப்பு

தியவன்னா எண்ணெய் படலம் குறித்த விசாரணை அறிக்கை சுற்றாடல் அமைச்சரிடம் கையளிப்பு

தியவன்னா எண்ணெய் படலம் குறித்த விசாரணை அறிக்கை சுற்றாடல் அமைச்சரிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2021 | 12:09 pm

Colombo (News 1st) தியவன்னா ஓயாவை நோக்கி மிதக்கும் எண்ணெய் படலம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த எண்ணெய் படலம் தொடர்பில் அமைச்சருக்கு கிடைத்த நிழற்படங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இராஜகிரிய முதல் புத்கமுவ பாலம் வரையான பகுதியில், எண்ணெய் படலம் தென்படும் நிலையில், குறித்த அறிக்கையில் அமைச்சருக்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எண்ணெய் படலம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீரின் மாதிரிகளும் விசாரணை குழுவினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்